5th September 2025
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திஸாநாயக்க அவர்களுடன் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் 2025 செப்டம்பர் 04 ஆம் திகதி ஸ்ரீ போதிராஜராமய விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தர்ம சொற்பொழிவில் கலந்துகொண்டார்.
வண. ராஜகிரியே அரியஞான தேரர் ஆற்றிய தர்ம பிரசங்கம், ஆயுதப் படைகளுக்கு ஆசிர்வாதம் கோருவதையும், தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த மறைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த மத நிகழ்வில் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ. உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.