2nd September 2025
இராணுவ சைக்கிள் ஓட்டுனர் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை இராணுவ படையணிகளுக்கு இடையிலான சைக்கிள் ஓட்ட சாம்பியன்ஷிப் - 2025, உடவலவேயில் 2025 ஆகஸ்ட் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் 118 ஆண் மற்றும் பெண் சைக்கிள் ஓட்டுனர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படைத் தளபதியும் விளையாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும், இராணுவ சைக்கிள் ஓட்டுனர் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் சி. களுத்தர ஆராச்சி இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் தனிநபர் நேர சோதனை, வீதி சைக்கிள் ஓட்டுதல், 45 வயதுக்கு மேற்பட்ட போட்டி மற்றும் பெண்களுக்கான ஸ்டேன்டர்ட் சைக்கிள் ஓட்ட போட்டி போன்ற போட்டிகள் இடம்பெற்றன. இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் அணி 95 புள்ளிகளுடன் அனைத்திலும் சாம்பியன்களாகத் தெரிவானது. அதே நேரத்தில் இலங்கை இராணுவ சேவை படையணி 43 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
சிறப்பு வெற்றியாளர்கள்:
• ஆண்களுக்கான வீதிப் போட்டி – சிப்பாய் ஏ.டி.எஸ். பெரேரா (இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி)
• ஸ்டேன்டர்ட் சைக்கிள் ஓட்ட போட்டி – லான்ஸ் கோப்ரல் ஜீ.சீ. மதுஷான் (இலங்கை இராணுவ சேவை படையணி)
• பெண்களுக்கான ஸ்டேன்டர்ட் வீதி போட்டி – கோப்ரல் யூ.என். குமாரசிங்க (இலங்கை இராணுவ மகளிர் படையணி)