மாத்தறை நீர் பற்றாக்குறையைப் போக்க நில்வலா ஆற்றில் தற்காலிக தடுப்பு

மாத்தறையில் மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வாக, துடாவயில் தற்போதுள்ள நில்வலா ஆற்றின் தடையை ஒட்டி தற்காலிக தடையை அமைக்கும் பணியை இலங்கை இராணுவம் மேற்கொண்டுள்ளது.

இந்த திட்டம் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மாத்தறை அனரத்த முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. 2025 ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்திற்கு 9 வது இலங்கை சிங்க படையணியிலிருந்து 25 பேர் கொண்ட குழு முழு ஆதரவை வழங்கியது.

வறண்ட காலங்களில் நீர் நிரம்பி வெளிச்செல்வதை தடுக்கும் நோக்கில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது. மணல் மூட்டைகளால் இடத்தை வலுப்படுத்துவதன் மூலம், தற்காலிகத் தடையானது, நீர் நிரம்பி பாய்வது திறம்பட தடுக்கப்படுவதை உறுதி செய்தது.

இந்த முயற்சி வெற்றிகரமாக நிறைவடைந்ததன் மூலம், மாத்தறை குடியிருப்பாளர்கள் மீண்டும் 24 மணி நேரமும் தடையின்றி குடிநீர் விநியோகத்தைப் பெறுவார்கள் என்பதுடன், அதே நேரத்தில் அப்பகுதியின் பம்பிங் நிலையங்களும் 24 மணி நேரமும் செயல்படும் நிலைக்கு மீட்டமைக்கப்பட்ட்டுள்ளது.