கல்லாறு தமிழ் மகா வித்தியாலயத்தில் வலைப்பந்து மைதானம் திறப்பு

கல்லாறு தமிழ் மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வலைப்பந்து மைதானம் 2025 ஆகஸ்ட் 27 ஆம் திகதி திறக்கப்பட்டது. இது அப்பிரதேசத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டை மேம்படுத்தும்.

பாடசாலை அதிபரின் வேண்டுகோளின் பேரில் 14 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

திறப்பு விழாவில் தர்மபுரம் தேசிய பாடசாலைக்கும் முருகானந்த மகா வித்யாலயத்திற்கும் இடையிலான போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது, உள்ளூர் நக்கொடையாளரின் ஆதரவுடன் இலங்கை இராணுவம் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகளை நன்கொடையாக வழங்கியது.

கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் எஸ். முரளிதரன், 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.ஏ.பி. விஜேகோன், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.