29th August 2025
22 வது காலாட் படைப்பிரிவின் மேற்பார்வையின் கீழ், திருகோணமலையில் ஒரு ஏழைக் குடும்பத்திற்கு 2 வது தொ) கஜபா படையணியினால் ஒரு புதிய வீடு கட்டப்பட்டது.
கட்டுமானப் பொருட்கள் மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்களை திருமதி நந்தா ரத்நாயக்க மற்றும் அவரது குடும்பத்தினர் தாராளமாக வழங்கினர். இத்திட்டம் மேஜர் ஜெனரல் பீ.ஏ.எம் பீரிஸ் (ஓய்வு) அவர்களினால் ஒருங்கிணைக்கப்பட்டது.
கட்டப்பட்ட புதிய வீடு 2025 ஆகஸ்ட் 23 ம் திகதி 22 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.யூ.ஏ சோலங்கராச்சி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களால் பயனாளிக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர்.