28th August 2025
இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ் “திருப்தியடைந்த மற்றும் துணிச்சலான இராணுவம்” என்ற தலைப்பில் விரிவுரை 2025 ஆகஸ்ட் 27 ஆம் திகதி நடாத்தப்பட்டது.
லெப்டினன் கேணல் ஈ.ஏ.எஸ்.எஸ். சமிந்த மற்றும் மேஜர் எம்.ஐ. மரிக்கார் ஆகியோரால் நடாத்தப்பட்ட இந்த அமர்வில், எதிர்கால பிரச்சினைகளை எதிர்கொள்வது, உளவியல் ரீதியான மீள்தன்மையை வலுப்படுத்துவது மற்றும் இராணுவ வீரர்களிடையே தொழில்முறை திருப்தியை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.