26th August 2025
51 வது காலாட் படைப்பிரிவு அதன் 30 வது ஆண்டு நிறைவு விழாவை 2025 ஆகஸ்ட் 23 ஆம் திகதி அதன் தலைமையகத்தில், 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்பீஎன்ஏ முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கொண்டாடியது.
17 வது கெமுனு ஹேவா படையணியின் படையினரால் வழங்கப்பட்ட பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதையுடன் அன்றைய நிகழ்வுகள் ஆரம்பமாகின, அதனைத் தொடர்ந்து குழுப்படம் மற்றும் படையினருக்கான உரை இடம்பெற்றன. அனைத்து நிலையினருக்குமான மதிய உணவு மற்றும் வண்ணமயமான இசை இரவுடன் அன்றைய கொண்டாட்ட நிகழச்சிகள் நிறைவடைந்தன.
இதற்கு இணையாக, 2025 ஆகஸ்ட் 22 ஆம் திகதி படைப்பிரிவு விகாரையில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்கேற்புடன் போதி பூஜை நடைபெற்றது.