51 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் நல்லூரில் பால் தேநீர் வழங்கல்

2025 ஆகஸ்ட் 20 முதல் 22 வரை நல்லூர் கந்தசாமி கோவில் வளாகத்தில், 51 வது காலாட் படைப்பிரிவின் படையினர் ப்யூர் டேல் சிலோன் லிமிடெட் மற்றும் ரிச்லைப் டெய்ரி லிமிடெட் ஆகியவற்றின் ஆதரவுடன், பக்தர்களிடையே 51,000 பால் தேநீர் கோப்பைகளை வழங்கினர்.

51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.பீ.என்.ஏ. முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.