25th August 2025
மத்திய பாதுகாப்பு படை தலைமையக படையினர், வறிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், பண்டாரவளை ஸ்ரீ மலியதேய வித்தியாலயத்தில் 2025 ஆகஸ்ட் 22 ஆம் திகதி பாடசாலை உபகரணம் வழங்கும் திட்டத்தை நடத்தினர்.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்கள் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். ப்ரொடெக்டர் கிளாதிங் மேனுபேக்ச்சர் (பிரைவேட்) லிமிடெட்டின் தலைவர் திருமதி என்.டி. குணசேகர, நிகழ்வில் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டார்.
மொத்தம் 108 மாணவர்களுக்கு புத்தகங்கள், பைகள், காலணிகள் மற்றும் அத்தியாவசிய பாடசாலை பொருட்கள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு குழு படம் எடுத்தல் மற்றும் சிறப்பு மதிய உணவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அதிபர், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.