21st August 2025
இலங்கை இராணுவ தொண்டர் படையணி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 ஆகஸ்ட் 18, அன்று பெலவத்தவில் உள்ள 1 வது இராணுவ முன்னோடி படையணிக்கு அதிகாரப்பூர்வ கள விஜயத்தை மேற்கொண்டார்.
வருகை தந்த தளபதி, முதலில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களின் நினைவு தூபிக்கு மரியாதை செலுத்தியதுடன் பின்னர் அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து 1 வது இராணுவ முன்னோடி படையணி கட்டளை அதிகாரியால் படையலகின் தற்போதைய பணிகள் மற்றும் எதிர்காலக் செயல்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
பின்னர், இலங்கை இராணுவ தொண்டர் படையணி படையினருக்கு உரையாற்றியதுடன் மேலும் தேசிய முயற்சிகளை ஆதரிப்பதில் வீரர்கள் மற்றும் இராணுவத்தின் முக்கிய பங்கை வலியுறுத்தி, இராணுவ நிலைப்பாட்டை நிலைநிறுத்துவதன் மற்றும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டினார். நிலைத்தன்மை, நெறிமுறைகள் மற்றும் அர்ப்பணிப்புள்ள சேவையை ஊக்குவிப்பதில் அரசாங்கத்தால் வழிநடத்தப்படும் "தூய இலங்கை" முயற்சியின் முக்கியத்துவத்தை அவர் மேலும் எடுத்துரைத்தார்.
பின்னர், அவர் முகாம் வளாகத்தில் மரக்கன்றை நாட்டியதுடன், முகாம் பகுதியை சுற்றிப் பார்த்து, விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவு செய்தார். இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.