21st August 2025
சேருவில பகுதியில் தேவையுடைய ஏழைக் குடும்பத்திற்கு 09 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.
வீடு திறப்பு நிகழ்வு 2025 ஆகஸ்ட் 18, அன்று நடைபெற்றதுடன், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேஎஸ்பிடபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்த திட்டம் 22வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்டிஎல்எஸ் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்பட்டது. இந்த வீட்டுத் திட்டத்திற்கான கட்டுமானப் பொருட்கள் மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்கள் திருமதி டிஸ்னா கலப்பத்தி வழங்கினார்.