14th August 2025
பிள்ளைகளின் கல்வியை ஆதரிக்கும் நோக்கில், 24வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் 2025 ஆகஸ்ட் 10 ஆம் திகதி பாடசாலை உதவி பொருட்கள் நன்கொடை வழங்கல் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சித்திட்டம் டாக்டர் விஜித நாகேந்திரம் அவர்களின் நிதி பங்களிப்பின் மூலம் 24 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் பணியாற்றும் படையினர் மற்றும் சிவில் ஊழியர்களின் 130 பிள்ளைகளுக்கு பாடசாலை உதவிபொருட்கள் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில், மாணவர்கள் தங்கள் திறமைகளை கண்கவர் பாடல் திறன்கள் மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தினர்.
24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்.சி.எல் கலப்பத்தி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையில் இந்த நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடைந்தது.