12th August 2025
2025 ஆகஸ்ட் 08 ஆம் திகதி பலாங்கொடை, இம்புல்பே, ஹால்பேயில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க, 18 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர், இலங்கை விமானப்படையுடன் இணைந்து விரைவாக செயல்பட்டனர்.
பாதிக்கப்பட்ட பகுதியிலுள்ளவர்களை மீட்டெடுப்பதற்காக, ஹெலிகாப்டர் மூலம் வான்வழி ஆதரவை வழங்கும் வகையில், விமானப்படை குழு ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது. 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் 572 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.