பதவி சிறுவர்கள் பேரணி – 2025

அனுராதபுரம், புனித ஜோசப் பேராலயத்தில் தர்ம கற்பித்தல் மற்றும் பைபிள் சேவை மையத்தால் ஆகஸ்ட் 8 முதல் 10 வரை ஏற்பாடு செய்யப்பட்ட 2025 பதவி சிறுவர்கள் பேரணியில், தரம் 6 முதல் 11 வரை சுமார் 450 மாணவர்களும், வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை சேர்ந்த 50 ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

வடமத்திய மாகாண ஆயர் அருட் தந்தை வண. நோபர்ட் ஆண்டகையின் வேண்டுகோளின் பேரில், வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் மற்றும் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் மேற்பார்வையின் கீழ் 21 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் வளங்கல் மற்றும் பொருள் உதவி வழங்கப்பட்டது. இவ் ஆதரவில் மனிதவளம், அத்தியாவசிய பொருட்கள், உபகரணங்கள், சிறுவர்கள் பாதுகாப்பு சொற்பொழிவு மற்றும் நடைமுறை பயிற்சி அமர்வுகள் ஆகியவை அடங்கும்.