12th August 2025
மறைந்த லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் 33வது நினைவு தினம் 2025 ஆகஸ்ட் 08 அன்று அனுராதபுரம் டென்சில் கொப்பேகடுவ நினைவுச் தூபியில் நடைபெற்றது.
இலங்கை இராணுவத்தின் பொதுப்பணி பணிப்பாளர் நாயகமும் இலங்கை கவசப் வாகன படையணி படைத்தளபதியுமான ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யுஎஸ்ஏடபிள்யூசி பீஎஸ்சி அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். மறைந்த லெப்டினன் ஜெனரலின் துணைவியார் திருமதி லாலி கொப்பேகடுவ அவர்கள், கொப்பேகடுவ குடும்ப உறுப்பினர்களுடன், சிறப்பு அழைப்பாளர்களாக நிகழ்வில் கலந்து கொண்டார்.
இலங்கையில் மிகவும் மதிக்கப்படும் இராணுவத் தலைவர்களில் ஒருவரின் சேவை, தலைமைத்துவம் மற்றும் தியாகத்தை கௌரவிக்கும் வகையில், மத அனுஷ்டானங்கள் மற்றும் நினைவு தூபியில் மலர் வளையம் வைத்தல் ஆகியவை இந்த விழாவில் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் விமானப்படை மற்றும் பொலிஸ் அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.