53 வது காலாட் படைப்பிரிவின் தளபதி கடமைகளைப் பொறுப்பேற்பு

கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.டீ. கொடேவத்த ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 53 வது காலாட் படைப்பிரிவின் (அவசர கால தாக்குதல் படை) 33 வது தளபதியாக 2025 ஆகஸ்ட் 08 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.

வருகை தந்த தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், அலுவலக வளாகத்தின் முன் ஒரு சந்தன மரக்கன்றை நாட்டியதுடன் 53 வது காலாட் படைப்பிரிவின் படையினருக்கு உரையாற்றினார். இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.