11th August 2025
2025 ஆகஸ்ட் 08 ஆம் திகதி ஊர்காவற்துறை அராலி முனைய நினைவுத்தூபியில், நாட்டின் புகழ்பெற்ற இராணுவத் தலைவர்களில் ஒருவரான லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ ஆர்சீடிஎஸ் பீஎஸ்சீ மற்றும் 1992 ஆகஸ்ட் 08 ஆம் திகதி அராலி முனையில் எல்.ரீ.ரீ.ஈயின் கண்ணிவெடித் தாக்குதலில் உயிர் தியாகம் செய்த பல இராணுவ போர் வீரர்களின் அழியாத நினைவுகளை நினைவு கூரப்பட்டது.
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.என். ரசிக்க குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
தேசிய கீதம் பாடப்பட்டு, அதைத் தொடர்ந்து மத அனுஷ்டானங்களுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பின்னர், நினைவஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உயிர்நீத்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி, வீரமரணமடைந்த அனைத்து வீரர்களுக்கும் மலர்வைத்து மரியாதை செலுத்தினார் இதனைத் தொடர்ந்து, ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அராலி முனை போர் வீரர்களின் நினைவுத்தூபியில் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், உயிர்நீத்த போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 'லாஸ்ட் போஸ்ட்' என்ற இறுதி வாசிப்பு வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு அணிநடையுடன் இந்நிகழ்ச்சி நிறைவடைந்தது.
வடக்கு கடற்படை பகுதியின் தளபதி, சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.