7th August 2025
மித்ர சக்தியின் - 11 பயிற்சிக்கான இறுதி திட்டமிடல் மாநாடு 2025 ஜூலை 30 முதல் ஓகஸ்ட் 02, வரை இந்தியாவின் கர்நாடகாவின் பெலகாவியில் வெற்றிகரமாக நடைபெற்றது. இலங்கை இராணுவத்தின் காலாட் படை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டிஎஸ் ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசீ, மூன்று சிரேஷ்ட அதிகாரிகளுடன், இந்திய இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து வரவிருக்கும் பயிற்சிக்கான செயல்பாட்டு விவரங்களை கலந்துரையாடினார். பின்னர் பயிற்சி பகுதிகளுக்கு கள விஜயம் மேற்கொண்டனர்.
இந்தியா-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கிய அங்கமான இந்தப் பயிற்சி, கூட்டு இராணுவத் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும், குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் அமைதி காக்கும் நடவடிக்கைகளில். தடையற்ற ஒருங்கிணைப்பு மற்றும் பயனுள்ள செயல்பாட்டை உறுதி செய்வதற்காக விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டன.
மாநாட்டின் முடிவில், இரு தரப்பினரும் நட்பு மற்றும் பரஸ்பர மரியாதையின் அடையாளமாக நினைவுப் பரிசுகளை பரிமாறிக்கொண்டனர்.