7th August 2025
இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகத்தின் 11 வது ஆண்டு நிறைவை 2025 ஜூலை 31, அன்று தொடர்ச்சியான நிகழ்வுகளுடன்,இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டிடிபீ சிறிவர்தன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
2025 ஜூலை 30, முதல் 2025 ஓகஸ்ட் 01 வரை, வெள்ளவத்த கோவிலில் இந்து ஆசீர்வாத பூஜை, கத்தோலிக்க சேவை கட்டுபெத்த தேவாலயத்தில் சிறப்பு ஆராதணை, முகாம் வளாகத்தில் ஒரு தர்ம பிரசங்கம் மற்றும் ரத்மலானை செவிபுலனற்ற பாடசாலையில் சிறுவர்களுக்கான அன்னதான நிகழ்வு உட்பட, பணிப்பகத்தின் அனைத்து நிலையினரின் பங்கேற்புடன் ஒரு இசை நிகழ்வும் நடத்தப்பட்டது.