14 வது இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படையணியினரால் வன்கோல்பேஸ் ரெசிடன் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தவும் வெடிகுண்டு மற்றும் (வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி) அச்சுறுத்தல்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பட்டறை 14 வது இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படையணியில் 2025 ஜூலை 29 அன்று நடத்தப்பட்டது.

இந்தப் பட்டறை, வன்கோல்பேஸ் ரெசிடன் பாதுகாப்பு ஊழியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது, இப்பட்டறை ஒரு பாதுகாப்பு நபராக அவர்களின் முக்கிய பங்கை அங்கீகரித்து வழங்கப்பட்டது.

இந்தப் பட்டறை, பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலில், இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் தலைமை களப் பொறியியலாளர் மற்றும் பொறியியல் படைப்பிரிவு தலைமையகத்தின் மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.