28th July 2025
51 வது காலாட் படைப்பிரிவினரால் 2025 ஜூலை 27ம் திகதி அன்று இருபாலை அன்னை தெரேசா முதியோர் இல்லம், புத்தூர் புனித லூகாஸ் மெதடிஸ்ட் முதியோர் இல்லம் மற்றும் உரும்பிராய் செல்வபுரம் உதய சூரியன் பாலர் பாடசாலை ஆகியவற்றில் தான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இம் திட்டத்திற்கான நிதி பங்களிப்பை மேஜர் ஜெனரல் (ஓய்வு) ரவி ரத்னசிங்கம் வழங்கினார். இந்த நிகழ்வில் 100 பயனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
51வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்பீஎன்ஏ முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.