23rd July 2025
2025 ஜூலை 22 ஆம் திகதி இராணுவப் புலனாய்வு படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பத்தரமுல்லை, மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகளால் ராஜகிரிய பிரதேசத்தில் ஒரு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, பன்னிப்பிட்டிய, தலவத்துகொடை பிரதேசத்தில் வசிக்கும் ஒரு சந்தேக நபரிடமிருந்து சுமார் 12 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 2 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
மேலதிக விசாரணைகளை பத்தரமுல்லை மதுவரித் திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.