முல்லைத்தீவு தாக்குதலில் வீரமரணமடைந்த போர் வீரர்களின் வருடாந்த நினைவு தினம்

1996 ஜூலை மாதத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு எதிராக முல்லைத்தீவு முகாமைப் பாதுகாப்பதில் இறுதி தியாகம் செய்த வீரமரணமடைந்த போர்வீரர்களை கௌரவிக்கும் வருடாந்த நினைவு நிகழ்வு 2025 ஜூலை 17 ஆம் திகதி முல்லைத்தீவு போர் வீரர்கள் நினைவுத்தூபியில் நடைபெற்றது.

59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஆர்.என். ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். முழு இராணுவ மரியாதையுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில், உயிர்நீத்த போர் வீரர்களுக்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்திருந்தனர்.