குருநாகல் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ 9 வது தேசிய பாதுகாவலர் படையினரால் அணைப்பு

குருநாகல் பொத்துஹெர வடகட முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள ஒரு சிறிய பிளாஸ்டிக் தொழிற்சாலையில் 2025 ஜூலை 19, அன்று மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

குருநாகல் மாநகர சபை தீயணைப்பு படையுடன் இணைந்து 9 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர் உடனடியாக தீயை அணைத்தனர்.