முல்லைத்தீவுப் போரில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு 29வது ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவுப் போரில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களை கௌரவிக்கும் 29 வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு 2025 ஜூலை 19 அன்று 1 வது விசேட படையணி போர் வீரர்கள் நினைவு தூபியில் நடைபெற்றது. இதன் போது 1996 ஜூலை 19 அன்று மறைந்த கேணல் ஏஎப் லாபீர் பீடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ மற்றும் தாய்நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த இரண்டு அதிகாரிகள் உட்பட 36 வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வு விசேட படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்டிஐ மகாலேகம் டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

இதற்கு இணையாக, 1 வது விசேட படையணியின் ஏற்பாட்டில் மாத்தளை, மடவல உல்பத்த வர்ணகுலசூரிய முதியோர் இல்லத்திற்கு நன்கொடைத் வழங்கும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த திட்டத்தில் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது அடங்கும். மாலையில் 1 வது விசேட படையணி வளாகத்தில், வீரமரணமடைந்த போர்வீரர்களை நினைவுகூர்ந்து, ஒரு தர்ம பிரசங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.