20th July 2025
இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூலை 18 ஆம் திகதி மத்தேகொடை பொறியியல் இல்லத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு சம்பிரதாயபூர்வமாக பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், அவர் ஒரு மரக்கன்றை வளாகத்தில் நாட்டியதுடன், அனைத்து நிலையினருடனும் குழுப்படம் எடுத்துக் கொண்டார்.
பின்னர், அவர் 5 வது கள பொறியியல் படையணி, 14 வது இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படையணி மற்றும் 16 வது பட்டறை படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றினார். தனது உரையின் போது, அவர் தனது எதிர்கால திட்டங்கள் மற்றும் முக்கிய நோக்கங்களை கோடிட்டுக் காட்டினார், ஒற்றுமை, செயற்பாட்டு சிறப்பம்சம் மற்றும் படையணியின் மனப்பான்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அவரது ஊக்கமளிக்கும் வார்த்தைகள் படையணியின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு மற்றும் கூட்டு முயற்சிக்கான அழைப்பாக காணப்பட்டது.
உரையைத் தொடர்ந்து, அவர் அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியின் போது, புதிதாக மாற்றியமைக்கப்பட்ட கண்ணிவெடி எதிர்ப்பு பதுங்கி தாக்குதல் எதிர்ப்பு வாகனத்தின் சாவியை 14 வது இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படையணியின் கட்டளை அதிகாரியிடம் அவர் ஒப்படைத்தார்.
இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணங்க, பொறியியல் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் எச்.கே.பீ கருணாதிலக்க ஆர்எஸ்பீ அந்தந்த கட்டளை அதிகாரிகளுடன் இணைந்து, படைப்பிரிவு தளபதியின் அலுவலகத்தில் விரிவான விளக்கங்களை வழங்கினர்.
இந்த விளக்கக்காட்சிகள் ஒவ்வொரு நிறுவனத்தின் செயற்பாடுகள், தற்போதைய பயன்பாடுகள் மற்றும் செயற்திறன் சிறப்பம்சங்களை விளக்குவதாக காணப்பட்டது.
உத்தியோகபூர்வ விஜயத்தின் முடிவில் படையணியின் படைத் தளபதி, 5 வது கள பொறியியல் படையணி, 14 வது இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படையணி மற்றும் 16 வது பட்டறை படைப்பிரிவின் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது கருத்துகளையும் பாராட்டுகளையும் பதிவிட்டார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த விஜயத்தில் கலந்து கொண்டனர்.