14th July 2025
"தூய இலங்கை" தேசிய திட்டத்திற்கு இணங்க, 55 வது காலாட் படைப்பிரிவின் கட்டளையின் கீழுள்ள படையலகுகளினால் 2025 ஜூலை 04 ஆம் திகதி சமூகம் சார்ந்த தொடர்ச்சியான திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
7 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, 22 வது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 14 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணிகளின் படையினர் "சிரமதான ஆபரேஷன்" என்ற கருப்பொருளின் கீழ் நிகழ்ச்சிகளை நடாத்தினர். தேசிய திட்டம் குறித்த விழிப்புணர்வு சொற்பொழிவுகள், மரம் நடுகை திட்டம் மற்றும் பிரதேசத்தை சுத்தம் செய்யும் திட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
கிளிநொச்சி மாவட்ட தொழிற்பயிற்சி அதிகாரசபை, கிளிநொச்சி தொழிற்பயிற்சி அதிகாரசபை, கிளிநொச்சி தேசிய தொழிற்பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சி ஆணையம், கிளிநொச்சி இலங்கை - ஜெர்மன் பயிற்சி நிறுவனம், பூநகரின் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தர்மபுரம் தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் இத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
885 இராணுவ வீரர்கள், 53 ஆசிரியர்கள், 493 மாணவர்கள் மற்றும் 52 பிரதேசவாசிகள் இத்திட்டங்களில் பங்கேற்றனர்.