11th July 2025
ராஜங்கனை 5 வது (தொ) கஜபா படையணியின் பணிநிலை சாஜன்ட் டபிள்யூஎம்ஜீஎம் மங்கள அவர்களுக்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டின் சாவியை, மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் 2025 ஜூலை 09 ம் திகதியன்று கையளித்தார்.
இராணுவத் தளபதியை மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் கஜபா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார்.
இந்தப் புதிய வீடு, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் வைத்தியர் காயத்திரி சல்காது (MBBS, FACGP) மற்றும் வைத்தியர் கலாநிதி பிரசாத் குணருவன் (MBBS, FRACP, PhD MRCP) ஆகியோரின் நிதி உதவியில் கஜபா படையணி சேவை வனிதையர் பிரிவின் ஒருங்கிணைப்பின் மூலம் கஜபா படையணி படையினரால் நிர்மாணிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.