51 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

51 வது காலாட் படைப்பிரிவின் படையினர் மாதகலில் தேவையுடைய குடும்பத்திற்கு ஒரு புதிய வீட்டைக் நிர்மாணித்து பயனாளியிடம் 2025 ஜூலை 07 அன்று கையளித்தனர்.

இந் நிகழ்வில் 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.பீ.என்.ஏ. முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த முயற்சிக்கான நிதி பங்களிப்பை திரு. ஜீவ பாலசிங்கம் வழங்கினார். இந்த திட்டத்தை முடிக்க 11வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் தங்கள் பணியாளர்களின் உதவியை வழங்கினர்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், பயனாளியின் குடும்ப உறுப்பினர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.