11th July 2025
இலங்கை இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூலை 09 அன்று கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, மருத்துவமனை தொடர்பான பிரச்சினைகள் குறித்து அனைத்து பணிப்பாளர்களுடன் கலந்துரையாடியதுடன், மேலும் மருத்துவமனை ஊழியர்களின் தங்குமிடத்தையும் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிலவும் நிலைமைகளைக் கவனித்து, குறைபாடுகள் கண்டறியப்பட்ட இடங்களில் உடனடியாக சீர்செய்ய நடவடிக்கைகளைத் ஆரம்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
மேலும் நோயாளர்கள் ஆவணப் பிரிவு, வெளிநோயாளர்கள் பிரிவு, நோயாளர்களுக்கான சமையலறை மற்றும் மருந்தகம் உள்ளிட்ட மருத்துவமனையின் பல முக்கிய செயல்பாட்டுப் பகுதிகளுக்கு கள விஜயம் மேற்கொண்டார். கட்டுமானத்தில் உள்ள 15 மாடி கட்டிடத்தையும் அவர் ஆய்வு செய்தார்.
இந்த விஜயத்தில் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.