11th July 2025
இராணுவ சேவையில் உள்ள பணியாளர்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் நோக்கத்துடன், அவர்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் 2025 ஜூலை 09 அன்று கஜபா படையணி தலைமையகத்தில் ஒரு நலன்புரி திட்டம் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். இராணுவத் தளபதியின் வாகன தொடரணிக்கு மரியாதை வழங்கப்பட்டதுடன், கஜபா படையணியின் படைத்தளபதி அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.
இராணுவ சம்பிரதாயங்களுக்குப் பிறகு, இராணுவத் தளபதி படையினருக்கு உரையாற்றியதுடன், இராணுவத்தில் பணியாற்றும் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களின் நலனுக்காகவும், வீரமரணம் அடைந்த போர் வீரர்களின் குடும்பங்களுக்காகவும் இராணுவத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை எடுத்துரைத்தார்.
பின்னர், இராணுவத் தளபதி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்த நிகழ்ச்சித் திட்டம் போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டதுடன் மேலும் தொடர்புடைய பணிப்பகங்கள் மற்றும் கிளைகளின் பிரதிநிதிகள் எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகளை வழங்க தங்கள் ஒத்துழைப்பை வழங்கினர்.