9 வது விஜயபாகு காலாட் படையணியினால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

9 வது விஜயபாகு காலாட் படையணியினால் சிறிமங்களபுரத்தில் உள்ள தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டு 2025 ஜூலை 04 அன்று வீட்டின் சாவி பயனாளியிடம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

சமுர்த்தி அபிவிருத்தித் துறை மற்றும் திரு. சமில் ஜயன் உள்ளிட்ட நன்கொடையாளர்களின் அனுசரணையின் மூலம் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.