விஹாரபலுகம வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ படையினரால் அணைப்பு

2025 ஜூலை 06 ஆம் திகதி அனுராதபுரம், பந்துலகம, விஹாரபலுகம வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை 212 வது காலாட் பிரிகேட் மற்றும் 2 வது பொறியியல் சேவைகள் படையணியின் படையினர் விரைவாக செயற்பட்டு அனைத்தனர்.

வேகமாகப் பரவி வரும் தீயை கட்டுப்படுத்தவும், கடினமான நிலப்பரப்பு, அடர்ந்த காடு மற்றும் காட்டு யானைகளால் ஏற்படும் அச்சுறுத்தல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் இராணுவ வீரர்கள் உடனடியாக பணயமர்த்தப்பட்டனர். இந்த ஆபத்துகள் இருந்தபோதிலும், அண்ணளவாக நான்கு மணி நேரத்தின் பின் அவர்கள் பாரிய சேதங்கள் ஏற்பாடாமல் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.