புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரலுக்கு அதிகாரச் சின்னம் வழங்கல்

அண்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வுபெற்ற இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் மேஜர் ஜெனரல் ஏஎம்ஆர் அபேசிங்க என்டிசீ அவர்கள் 2025 ஜூலை 08 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகாரச் சின்னத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றார்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தேசத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்து நிலை உயர்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிக்கு இராணுவத் தளபதி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

சுமூக கலந்துரையாடலினை பின்னர் இராணுவத் தளபதி, புதிய மேஜர் ஜெனரலுக்கு அவரது புதிய அதிகாரத்தைக் குறிக்கும் வகையில், ஜெனரலின் அடையாள வாளினை வழங்கினார்.