8th July 2025
இலங்கை இராணுவத்தின் 47 வது பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களை கௌரவிக்கும் விழா, 2025 ஜூலை 04 ஆம் திகதி இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.
வருகை தந்த புதிய பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியை நிலைய தளபதி படையணி தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலில் மரியாதையுடன் வரவேற்றார். இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், தாய் நாட்டிற்காக உயர்ந்த தியாகம் செய்த வீரமரணமடைந்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில், இலங்கை இலேசாயுத காலாட் படையணி போர் வீரர்களின் நினைவுத் தூபியில் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவர் அனைத்து அதிகாரிகளுடனும் குழுப்படம் எடுத்துக் கொண்டார்.
அவர் படையினருக்கு ஆற்றிய உரையின் போது, தனது எதிர்கால தொலைநோக்கு பார்வை மற்றும் நோக்கங்களை விளக்கினார். மேலும் நாட்டில் நீடித்த அமைதியை நிலைநாட்ட பங்களித்த அனைத்து உயிர் தியாகம் செய்த, காயமடைந்த மற்றும் சேவையிலுள்ள அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
இறுதியாக, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி சிப்பாய்களின் உணவகத்தில் நடைபெற்ற அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் பங்கேற்றார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.