புதிய இராணுவ பதவி நிலை பிரதானியான இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதிக்கு பாராட்டு

பொறியியல் படையணி உருவாக்கிய 10 வது பதவி நிலை பிரதானியும் பொறியியல் படையணி படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள், 2025 ஜூலை 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று படையணி தலைமையகத்தில் சம்பிரதாய ரீதியாக பாராட்டப்பட்டார். இந்த சிறப்பு சந்தர்ப்பம், படையணி, அதன் புகழ்பெற்ற சிரேஷ்ட அதிகாரிகளில் ஒருவரை கௌரவிக்க ஒன்றிணைந்ததால் பெருமை மற்றும் ஒற்றுமையின் தருணத்தைக் குறிக்கிறது.

படையணி தலைமையகத்திற்கு வருகை தந்த அவரை, நிலைய தளபதி கேணல் ஆர்.எம். சுபசிங்க ஆர்எஸ்பீ அவர்கள் பிரதான நுழைவாயிலில் மரியாதையுடன் வரவேற்றார். மேலும், இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் நாட்டிற்காக உயர்ந்த தியாகம் செய்த வீரமரணமடைந்த போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, படையணி நினைவு தூபியில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், படையணியின் தொழில்முறை மற்றும் பெருமையை வெளிப்படுத்தும் வகையில், படையணி அணிவகுப்பு மைதானத்தில் சிரேஷ்ட அதகாரிக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

சம்பிரதாய நிகழ்வுகளைத் தொடர்ந்து, படையணியின் படைத் தளபதி, படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றினார். இதன் போது அவர் தனது எதிர்கால தொலைநோக்கு பார்வை மற்றும் படையணியின் ஒற்றுமை, செயற்பாட்டு சிறப்பம்சம் மற்றும் படையணியின் உணர்வை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய விடயங்களை விளக்கினார். அவரது உரை தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான கூட்டு அர்ப்பணிப்புக்கான உத்வேகமாகவும் அழைப்பாகவும் காணப்பட்டது.

அன்றைய நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் உணவகத்தில் தேநீர் விருந்துபசாரம் வழங்கப்பட்டது. இது படையணியின் நட்புறவை வளர்ப்பதற்கான ஒரு நிதானமான சூழலை வழங்கியது. படையணியின் தலைமைத்துவத்தையும் கட்டளைப் பொறுப்பையும் மேலும் மேம்படுத்துவதற்கான முக்கியமான வழிகாட்டுதல்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை வழங்கியதுடன், அனைத்து கட்டளை அதிகாரிகளுக்கும் ஒரு தனி அமர்வில் உரையாற்றியதுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.