5th July 2025
இராணுவக் பொலிஸ் படையணியின் படைத் தளபதியும் இராணுவத் தலைமையகத்தின் இராணுவச் செயலாளருமான மேஜர் ஜெனரல் யூஎல்ஜேஎஸ் பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ்சீ அவர்கள் 34 வருட சிறப்புமிக்க இராணுவ வாழ்க்கையை நிறைவு செய்து இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், 2025 ஜூலை 04 ஆம் திகதி தனது குடும்ப உறுப்பினர்களுடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை சந்தித்தார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:
மேஜர் ஜெனரல் யூஎல்ஜேஎஸ் பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ்சீ அவர்கள் 1991 ஜனவரி 02 ஆம் இலங்கை இராணுவத்தில் பயிலிளவல் அதிகாரியாக பாடநெறி எண் 08 இல் இணைந்தார். ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரி- ரத்மலான மற்றும் தியத்தலாவை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர், 1992 நவம்பர் 14 ஆம் திகதி ஆம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் கெமுனு ஹேவா படையணியில் நியமிக்கப்பட்டார். அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர் 2024 பெப்ரவரி 04, அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி தனது 55 வயதை அடைந்ததும் 2025 ஜூலை 06 நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். ஓய்வு பெறும் நேரத்தில், இராணுவக் பொலிஸ் படையணியின் படைத் தளபதியும் இராணுவத் தலைமையகத்தின் இராணுவச் செயலாளராக பதவி வகிக்கின்றார்.
மேஜர் ஜெனரல் யூஎல்ஜேஎஸ் பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ்சீ அவர்கள் அவர்கள் தனது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையில் பல்வேறு முக்கிய நியமனங்களை வகித்துள்ளார். 6வது கெமுனு ஹேவா படையணியின் படைப்பிரிவுத் தளபதி, 6 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி, 52 வது காலாட் படைப்பிரிவின் அப்போதைய பொது அதிகாரியின் கட்டளைத் தளபதி மற்றும் கொழும்பு ஒட்டுமொத்த செயல்பாட்டுக் கட்டளைத் தளபதியின் உதவியாளர், மறைந்த மேஜர் ஜெனரல் பீஎஸ்பீ குலதுங்கே ஆர்எஸ்பீ யூஎஸ்பீ யூஎஸ்எடபிள்யூசீ, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரியின் குழு தளபதி/பணி நிலை அதிகாரி 2 (பயிற்சிப் பிரிவு), 6வது கெமுனு ஹேவா படையணியின் செயல்பாடுகள் மற்றும் பயிற்சி அதிகாரி, 214 காலாட் பிரிகேட் மேஜர், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் அதிகாரி பயிலிளவல் பிரிவின் கட்டளை அதிகாரி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பிரதி அதிகாரி, ஹைட்டி ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்படுத்தல் பாதுகாப்பு பணியின் பணி நிலை அதிகாரி, இராணுவத் தலைமையகத்தின் இராணுவச் செயலாளர் கிளையின் 1 (தரம் 2 மற்றும் அதற்குக் கீழே பதவி உயர்வு) பணியாளர் அதிகாரி, 8வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி ஆகிய நியமனங்களை வகித்துள்ளார்.
மேலும், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பணிப்பாளர், யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கேணல் பொது பணி, 573 வது காலாட் பிரிகேட் பதில் தளபதி ஆகிய நியமனங்களை சிரேஷ்ட அதிகாரி வகித்துள்ளார். பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பீடத்தின் பீடாதிபதி – ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், பெய்ஜிங். சீனா இலங்கைத் தூதரகத்திற்கான ஆலோசகர் (பாதுகாப்பு), இலங்கை ஜனாதிபதியின் தலைமைப் பணியாளர் அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் 2, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி, இராணுவத் தலைமையகத்தின் இராணுவச் செயலாளர் மற்றும் இராணுவக் பொலிஸ் படையணியின் படைத் தளபதி ஆகிய நியமனங்களை அவர் வகித்தார்.
இலங்கை இராணுவத்திற்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சலான சேவையை அங்கீகரிக்கும் வகையில், அவருக்கு ரண சூர பதக்கம் மற்றும் உத்தம சேவா பதக்கம் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
சிரேஷ்ட அதிகாரி, குழு தளபதிகள் பாடநெறி, படையலகு ஆதரவு ஆயுத அதிகாரிகள் பாடநெறி, அடிப்படை பாராசூட் பயிற்சி பாடநெறி, உளவியல் செயல்பாட்டு பயிற்சி பாடநெறி, சாத்தியமான கண்காணிப்பாளர் மற்றும் பணியாளர் அதிகாரிகள் பாடநெறி மற்றும் இராணுவ கட்டளை மற்றும் பணியாளர் பாடநெறி உள்ளிட்ட பல உள்நாட்டு பயிற்சி பாடநெறிகளையும் வெற்றிகரமாக முடித்துள்ளார்.
படைப்பிரிவு ஆயுத அதிகாரிகள் பாடநெறி - இந்தியா, இளம் அதிகாரிகள் பாடநெறி - இந்தியா, கனிஷ்ட கட்டளை பாடநெறி - இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகளின் இராணுவ பார்வையாளர்கள் பாடநெறி, மலேசியா உள்ளிட்ட பல வெளிநாட்டு பயிற்சி திட்டங்களையும் அவர் பின்பற்றியுள்ளார்.
கல்வி சாதனைகளைப் பொறுத்தவரை, அமெரிக்காவின் கலிபோர்னியாவின் மான்டேரியில் உள்ள கடற்படை முதுகலை பாடசாலையில் பாதுகாப்பு பகுப்பாய்வில் முதுகலை அறிவியல், களனி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு பட்ட படிப்புகளில் முதுகலை, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரியில் பாதுகாப்பு படிப்பில் இளங்கலை (கௌரவ), பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்தில் பொது பாடநெறி மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையத்துடன் இணைந்து கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ பாலி வளாகத்தில் உள்ள வெகுஜன ஊடக ஆய்வுகள் துறையால் நடத்தப்பட்ட பாதுகாப்பு ஊடகம் மற்றும் தொடர்பிற்கான குறுகிய கால பாடநெறி ஆகியவற்றை அவர் பயின்றுள்ளார்.