ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் படைத் தளபதியும், வழங்கல் கட்டளை தளபதியுமான மேஜர் ஜெனரல் ஈஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சீ எல்எஸ்சீ ஏஏடிஓ அவர்கள் 35 வருட சிறப்புமிக்க இராணுவ வாழ்க்கையை நிறைவு செய்து இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், 2025 ஜூலை 07 ஆம் திகதி தனது குடும்ப உறுப்பினர்களுடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை சந்தித்தார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:

மேஜர் ஜெனரல் இஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சீ எல்எஸ்சீ ஏஏடிஓ அவர்கள் 1990 செப்டம்பர் 07, அன்று இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரி பாடநெறி எண் 2 இலங்கை இராணுவத்தில் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரி மற்றும் தியத்தலாவை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர் 1991 மார்ச் 13, இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை இராணுவ போர் கருவி படையணியில் நியமிக்கப்பட்டார். அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர் , 2023 ஒக்டோபர் 31 ம் திகதியன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2025 ஜூலை 08 ம் திகதி தனது 55 வயதை அடைந்ததும் நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். ஓய்வு பெறும் போது, அவர் வழங்கல் கட்டளைத் தளபதி மற்றும் இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் படைத் தளபதியாக பதவி வகிக்கின்றார்.

மேஜர் ஜெனரல் இஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சீ எல்எஸ்சீ ஏஏடிஓ அவர்கள் தனது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையில் பல்வேறு முக்கிய நியமனங்களை வகித்துள்ளார். 6 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி விசேட பாதுகாப்பு படைப்பிரிவு பணிக்குழு 1 தலைமையகத்தின் படைப்பிரிவுத் தளபதி, காலாட் படை பயிற்சி மையத்தில் அதிகாரி பயிற்றுவிப்பாளர், போர் பயிற்சிப் பாடசாலையின் பயிற்சிப் பிரிவின் படைப் பிரிவுத் தளபதி, அனுராதபுரம் 2வது பிரிவு போர்கருவி பிரிவின் குழு அதிகாரி, வெலிஓயா முன்பக்க போர்கருவி டிப்போவின் கட்டளை அதிகாரி, மேஜர் ஜெனரல் டி சிவசண்முகம் யூஎஸ்பீ போர் கருவி பணிப்பாளர் நாயகத்தின் உதவியாளர், இராணுவத் தலைமையகத்திள் போர் கருவி பணிப்பாளர் கிளையின் பணி நிலை அதிகாரி 3, கொமாண்டோ பிரிகேட் தலைமையகத்தில் மேஜர் (நிர்வாகம் மற்றும் விடுதி) அதிகாரி, வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பணி நிலை அதிகாரி 2 (வழங்கல்), இராணுவத் தலைமையகத்தின் போர்கருவி சேவைகள் பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி 2, (துறைமுகப் பிரிவு), இராணுவத் தலைமையகத்தின் போர் கருவி சேவைகள் பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி 2 (உள்ளூர் கொள்முதல்), தியத்தலாவ முன்னரங்கு போர்கருவி டிப்போவின் கட்டளை அதிகாரி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பணி நிலை அதிகாரி 2 (வழங்கல்), 515 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தின் (நிர்வாகம் மற்றும் விடுதி) மேஜர், இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் பணி நிலை அதிகாரி 1 (நிர்வாகம்), போர் கருவி பாடசாலையின் தளபதி, இலங்கை இராணுவ 4வது (தொ) போர் கருவி படையணியின் கட்டளை அதிகாரி, இராணுவ தலைமையக போர் கருவி சேவைகள் பணிப்பகத்தின் பணி நிலை அதிகாரி 1 (வழங்கல், கொள்முதல் மற்றும் முன்னேற்றம்), மத்திய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து கழஞ்சிய பிரதி தளபதி, 59 வது காலாட் படைப் பிரிவின் கேணல் (நிர்வாகம் மற்றும் விடுதி), இராணுவத் தலைமையக வெளிநாட்டு நடவடிக்கை பணிப்பகத்தின் கேணல் (வழங்கல்), இராணுவத் தலைமையக போர் கருவி பணிப்பாளர் கிளையின் கேணல் (வழங்கல்), (கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையகத்தின் கேணல் (நிர்வாகம் மற்றும் விடுதி), இராணுவத் வழங்கல் பாடசலையின் தளபதி, வடக்கு முன்னரங்க பராமரிப்பு பிரிவின் தளபதி, இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் படைத் தளபதி, யாழ் பாதுகாப்புப் படை தலைமையகத்தின் வழங்கல் பிரிவு தளபதி மற்றும் இராணுவத் தலைமையகத்தில் வழங்கல் கட்டளைத் தளபதி ஆகிய நியமனங்களை வகித்துள்ளார்.

இலங்கை இராணுவத்திற்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சலான சேவையை அங்கீகரிக்கும் வகையில், அவருக்கு உத்தம சேவா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

அதிகாரி விசேட பயிற்சி, கணினி பயிற்சி, களஞ்சிய முகாமை மற்றும் கொள்முதல் நடைமுறை பயிற்சி, ஐக்கிய நாட்டு அமைதி காக்கும் முன் பயிற்சி பாடநெறி உள்ளிட்ட பல உள்நாட்டு பயிற்சிகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

பங்களாதேஷ் அடிப்படை போர்கருவி அதிகாரிகள் பாடநெறி, பாகிஸ்தான் வழங்கல் பணிநிலை பாடநெறி, பாகிஸ்தான் வழங்கல் மற்றும் பொருள் முகாமைத்துவ நிதி முகாமைத்துவ மனிதவள முகாமைத்துவ பாடநெறி, இந்தியா மேம்படுத்தப்பட்ட பொருட்கள் முகாமைத்துவ பாடநெறி, இந்தியா சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் பாடநெறி, பங்களாதேஷ் ஐக்கிய நாடுகளின் வழங்கல் அதிகாரிகள் பாடநெறி மற்றும் இந்தியா உயர் பாதுகாப்பு முகாமைத்துவ பாடநெறி உள்ளிட்ட பல வெளிநாட்டு பயிற்சி திட்டங்களையும் அவர் பின்பற்றியுள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் சான்றிதழ், இலங்கையில் உள்ள அக்வினாஸ் பல்கலைக்கழக கல்லூரியில் ஹோட்டல் முகாமைத்துவ பட்டம் மற்றும் இந்தியா உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பட்ட படிப்புகளில் முதுகலைப் பட்டம் உள்ளிட்ட கல்வி தகைமைகளையும் கொண்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டில் சிறு ஆயுத வெடிமருந்து உற்பத்தித் திட்டத்தை நிறுவுவதற்காக இந்தியாவுக்கு வருகை தருவது போன்ற சர்வதேச மன்றங்களிலும் அவர் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும்.