4th July 2025
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஜூலை 03, அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது மிஹிந்து செத் மெதுர நலவிடுதிக்கு உத்தியோகப்பூர்வமாக வாகனத்தினை ஒப்படைத்தார்.
மாற்றுத்திறனாளி போர் வீரர்களுக்களின் நலன் கருதி மிஹிந்து செத் மெதுர நலவிடுதியில் வசிக்கும் போர் வீரர்களின் நலனுக்காகவும் அன்றாட பயன்பாட்டிற்காகவும் ஜனாதிபதி செயலகத்தால் இந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளரும், மிஹிந்து செத் மெதுர நலவிடுதியின் தளபதி, மிஹிந்து செத் மெதுர நலவிடுதி சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் போர்வீரர்களும் கலந்து கொண்டனர்.