ஹந்தான மலைத்தொடரில் சிக்கிய மலையேறும் நபர்களை படையினர் மீட்பு

அவசரகால சூழ்நிலைக்கு விரைவாக பதிலளித்து, 2 வது (தொ) இலங்கை சிங்க படையணி படையினர் 2025 ஜூன் 29 ஆம் திகதி அதிகாலையில் ஹந்தான மலைத்தொடரில் சிக்கித் தவித்த நபர்களைக் கண்டுபிடித்து அவர்களை மீட்கும் பணியை வெற்றிகரமாகத் தொடங்கினர்.

111 வது காலாட் பிரிகேடின் அறிவுறுத்தல்களின் பேரில் மீட்புக் குழு உடனடியாக அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டது.

சவாலான நிலப்பரப்பு மற்றும் அடர்ந்த காட்டுப் பகுதி வழியாக பயணித்த பிறகு, அதிகாலை 2:40 மணியளவில் படையினர் சிக்கிய நபர்களை வெற்றிகரமாகக் கண்டுபிடித்து, உடனடியாக அவர்களைக் காட்டில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் பணியைத் தொடங்கினர்.