28th June 2025
கமாண்டோ படையணியின் மேஜர் ஜெனரல் டீ.சி.என்.ஜி.எஸ்.டீ கூரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் 11 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதியாக 2025 ஜூன் 24 அன்று பல்லேகலையில் உள்ள 11 வது காலாட் படைபிரிவு தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் பதவியேற்றார்.
அன்றைய தினத்தை நினைவுகூரும் வகையில், புதிய தளபதி குழு படம் எடுத்துக்கொண்டதுடன் பின்னர் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்தில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.