28th June 2025
11 வது காலாட் படைப்பிரிவின் படையினர், வெளிச்செல்லும் 11வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎயூ கொடிதுவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களுக்கு 2025 ஜூன் 21 ஆம் திகதி 11 வது காலாட் படைப்பிரிவில் பிரியாவிடை வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய 2 வது (தொ) சிங்க படையணி படையினரால் வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அன்றைய தினத்திற்கு நினைவுகளைச் சேர்க்கும் விதமாக, வெளிச்செல்லும் தளபதி, குழு படம் எடுத்துக்கொண்டதுடன் மேலும், படைப்பிரிவு தலைமையகத்தின் முன் புதிதாக அமைந்துள்ள 120 மிமீ மோட்டார் பீரங்கி துப்பாக்கிகளை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
அனைத்துப் படையினருக்கும் ஆற்றிய உரையில், தனது பதவிக்காலத்தில் அனைத்துப் படையினரும் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு மற்றும் அர்ப்பணிப்புமிக்க சேவைக்கு தளபதி பாராட்டு தெரிவித்தார்.
அன்றைய நிகழ்வுகள் அனைத்து நிலையிருடனான தேநீர் விருந்துபசாரத்துடன் நிறைவைடைந்தது.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.