இலங்கை இராணுவ தொண்டர் படையணியினால் வெளிச்செல்லும் தளபதிக்கு பிரியாவிடை

இலங்கை இராணுவ தொண்டர் படையணியினால் வெளியேறும் இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களுக்கு இராணுவ பதவி நிலை பிரதானியாக பதவியேற்பதற்கு முன்னர் 2025 ஜூன் 25 அன்று இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கப்பட்டது.

வருகையின் போது அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் இலங்கை இராணுவ தொண்டர் படையணி பிரதி தளபதியினால் அன்புடன் வரவேற்கப்பட்டார். பின்னர், மறைந்த கெப்டன் சாலிய அலதெனிய பீடப்ளியூவீ அவர்களின் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர், அவர் இலங்கை இராணுவ தொண்டர் படையணி படையினருக்கு உரையாற்றியதுடன் இலங்கை இராணுவ தொண்டர் படையணியில் தனது பதவிக்காலம் முடிவடைவதைக் குறிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு அலுவலகத்தில் தனது உருவப்படத்தை திறந்து வைத்துடன் மேலும் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களையும் வாழ்த்துக்களையும் பதிவு செய்தார். பின்னர் சிரேஷ்ட அதிகாரி குழு படம் எடுத்துக்கொண்டார்.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவ தொண்டர் படையணின் சிப்பாய்கள் பங்குபற்றினர்.