26th June 2025
தாய்லாந்து தடகள சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தாய்லாந்து திறந்த தடகள சாம்பியன்ஷிப் - 2025, தாய்லாந்தின் பத்தும்தானியில் 2025 ஜூன் 22 அன்று நடைபெற்றது.
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பின்வரும் சாதனைகளைப் படைத்தனர்:
• 6 வது கெமுனு ஹேவா படையணியின் கோப்ரல் ஜீ.ஆர். சதுரங்க இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றார்.
• 2 வது (தொ) இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் கோப்ரல் எம்.என்.எஸ். அஹமட் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.
• 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் லான்ஸ் கோப்ரல் வீ. வக்சன் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றார்.
• 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளீர் படையணியின் பெண் சிப்பாய் எச்.டபிள்யூ.கே. ஹப்புஆராச்சி வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.
இலங்கை இராணுவ தடகளக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் பீ.ஜீ.எஸ். பெர்னாண்டோ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவ வீரர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.