இலங்கை இராணுவ செபக்டக்ரா அணிகள் தேசிய சாம்பியன்ஷிப் பதக்கங்களை வெல்லல்

இலங்கை தேசிய செபக்டக்ரா சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய செபக்டக்ரா சாம்பியன்ஷிப் 2025 ஜூன் 15 அன்று புத்தளம் நகராட்சி மன்ற உள்ளக மைதானத்தில் நிறைவடைந்தது.

இந்த நிகழ்வின் போது இலங்கை இராணுவ ஆண்கள் மற்றும் பெண்கள் செபக்டக்ரா அணிகள் சாம்பியன்களாகத் தெரிவாகின. இராணுவ காற்பந்து குழுவின் தலைவரான மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரட்ண ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் அணிகள் போட்டியிட்டன.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.