26th June 2025
யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தின் 33வது தளபதியாக மேஜர் ஜெனரல் கே.ஏ.என். ரசிக்க குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூன் 24 அன்று பதவியேற்றார்.
இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், புதிய யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, ஒரு மரக்கன்றை நாட்டியதுடன், படையினருடன் குழு படம் எடுத்துக்கொண்டார். பின்னர் அவர் யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக படையினருக்கு உரையாற்றியதுடன் படையினரின் ஒழுக்கத்தைப் பேணுதல், இராணுவம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைப்படுத்துதல் மற்றும் சம்பளத்தை நிர்வகிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
மேலும், அவர் தனது எதிர்பார்ப்புகளை அதிகாரிகளுக்கு விளக்கினார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.