26th June 2025
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானியாக (இராணுவத்தில் மூன்றாவது சிரேஷ்ட நியமனம்) 2025 ஜூன் 26 அன்று இராணுவத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
பிரதி பதவி நிலை பிரதானி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மத அனுஸ்டானங்களுக்கு மத்தியில் உத்தியோகப்பூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டு புதிய பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.
கடந்த காலங்களில் யாழ். மற்றும் மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி, மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் பிரதி தளபதி மற்றும் 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி போன்ற முக்கிய பதவிகளில் முன்னர் பணியாற்றிய அவர், இந்தப் பதவிக்கு ஏராளமான அனுபவத்தையும் மூலோபாய அறிவையும் கொண்டுள்ளார். இந்தப் பணிகளில் அவரது தலைமைத்துவம் அவரது செயல்பாட்டு புத்திசாலித்தனத்தையும் தொழில்முறை சிறப்பையும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் முதன்மைப் பணிநிலை அதிகாரிகள், பணிப்பாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டு, புதிய பிரதி பதவி நிலை பிரதானிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.