23 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் வெளிச்செல்லும் தளபதிக்கு பிரியாவிடை

23 வது காலாட் படைப்பிரிவின் படையினர், வெளிச்செல்லும் 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீ.எஸ். சுபாத் சஞ்சீவ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களுக்கு 2025 ஜூன் 21 ஆம் திகதி23 வது காலாட் படைப்பிரிவில் பிரியாவிடை வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய 7 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்தின் போது, அனைத்து நிலையினருடனும் கலந்துரையாடியதுடன், தனது பதவிக்காலத்தில் அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவைக்கு நன்றி தெரிவித்தார்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.