25th June 2025
மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இலங்கை பொறியியல் படையணியில் 24 வது படைத் தளபதியாக 2025 ஜூன் 23, அன்று பனாகொடை படையணி தலைமையத்தில் இராணுவ சம்பிரதாயத்திற்கமைய கடமை பொறுப்பேற்றார்.
வருகை தந்த புதிய தளபதியை நிலைய தளபதி மரியாதையுடன் வரவேற்றதை தொடர்ந்து, படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதன் பின்னர், சிரேஷ்ட அதிகாரி வீரமரணமடைந்த வீரர்களின் நினைவு தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சம்பிரதாய நிகழ்வுகளைத் தொடர்ந்து படைத் தளபதி, பேரவை உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் உரையாற்றினார். அவர் தனது உரையில் படையணியின் ஒற்றுமை, செயற்பாட்டு சிறப்பு மற்றும் படையணியின் உணர்வை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தனது தொலைநோக்குப் பார்வை மற்றும் நோக்கங்களை விளக்கினார். அதிகாரிகள் உணவகத்தில் இடம் பெற்ற தேநீர் விருந்துபசாரத்துடன் அன்றைய நிகழ்வுகள் நிறைவுற்றன.