25th June 2025
பனகொடை இராணுவ உடற் பயிற்சி பாடசாலையின் 2025 ஆம் ஆண்டின் முதலாவது பாடத்திட்டத்தின் பட்டமளிப்பு விழா 2025 ஜூன் 19 ஆம் திகதி பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.என்.கே.டி பண்டார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
அதிகாரி உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் உயர் பாடநெறி எண். 19 இலிருந்து 11 அதிகாரி பயிற்றுவிப்பாளர்கள், உயர் பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண். 49 இலிருந்து 10 சிப்பாய்கள் மற்றும் உதவி உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண். 134 இலிருந்து 100 சிப்பாய்களும் இந்த விழாவில் பட்டம் பெற்றனர்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் மாணவர்கள், அவர்களின் பெற்றோருடன் விழாவில் பங்கேற்றனர்.